சினிமா

22 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த என்ன சொல்லப்போகிறாய் ஜோடி? அசர வைக்கும் AK61ன் அடுத்தடுத்த அப்டேட்!

அண்மையில் அஜித்தின் 61வது படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்திருந்தார்.

22 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த என்ன சொல்லப்போகிறாய் ஜோடி? அசர வைக்கும் AK61ன் அடுத்தடுத்த அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்துக்கு பிறகு அஜித்தின் 61வது படத்தையும் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார்.

பிப்ரவரி 24ம் தேதி வலிமை படம் வெளியாக இருக்கும் வேளையில், போனி மற்றும் வினோத் குழுவினரோ அஜித் 61 படத்துக்கான வேலைகளில் மூழ்கியிருக்கிறார்கள்.

அதன்படி அண்மையில் வெளியான AK61 படத்தின் அஜித்தின் லுக் சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

இப்படி இருக்கையில், AK61 படத்துக்கான கதாநாயகி, படப்பிடிப்பு என பல அப்டேட்கள் அடங்கிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, வலிமை படம் ரிலீஸாக கையோடு மார்ச் 9ம் தேதி AK61 படக்குழு ஹைதராபாத் பறக்கின்றன. அங்குள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்தான் படம் உருவாக இருக்கிறது.

22 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த என்ன சொல்லப்போகிறாய் ஜோடி? அசர வைக்கும் AK61ன் அடுத்தடுத்த அப்டேட்!

மேலும், சென்னையில் உள்ள அண்ணா சாலையை போன்று செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட இருப்பதாகவும், இந்த படத்தின் நாயகியாக தபு நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவல் உறுதியானால் 22 ஆண்டுகள் கழித்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்கு பிறகு அஜித்தும் தபுவும் இணையும் படமாக AK61 இருக்கும்.

இதுபோக, அண்மையில் வெளியான AK61 படத்துக்கான லுக்கை அஜித்தே அமைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வலிமை படத்தை போன்று அஜித்தின் 61வது படமும் பான் இந்தியா அளவில் 5 மொழிகளிலும் வெளியாகப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிடும் வகையில் மார்ச்சில் தொடங்க இருக்கும் படத்தின் ஷூட்டிங் பணிகளை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

banner

Related Stories

Related Stories