சினிமா

”ஜாலி ஜாலி அடிபோலி” - வெளியானது அரபிக் குத்து; Halamithi Habibo மோடில் விஜய் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து வெளியானது.

”ஜாலி ஜாலி அடிபோலி” - வெளியானது அரபிக் குத்து; Halamithi Habibo மோடில் விஜய் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் 65வது படமாக உருவாகி ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது பீஸ்ட் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இதுவரையில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அரபிக் குத்து என்ற பெயரில் பெப்பி பாடலாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் இயற்றியிருக்கும் இந்த பாடலை அனிருத்தும், ஜொனிடா காந்தியும் இணைந்து பாடியுள்ளனர். முன்னதாக இந்த அரபிக் குத்து பாடலுக்கான ப்ரோமோ வீடியோ கடந்த வாரம் வெளியாகி 1.6 கோடிக்கும் மேலானோர் கண்டு களித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories