சினிமா

’தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாசிடீவ் Vibe படம்’ - அசோக் செல்வனின் ’நித்தம் ஒரு வானம்’ பட அப்டேட் வெளியீடு

அசோக் செல்வனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்.

’தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாசிடீவ் Vibe படம்’ - அசோக் செல்வனின் ’நித்தம் ஒரு வானம்’ பட அப்டேட் வெளியீடு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெகிடி, ஓ மை கடவுளே உட்பட பல படங்களில் நடித்துள்ள அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்திலான மன்மதலீலை என்ற படத்தின் 4 நாயகிகளுடன் நடித்து வருகிறார் அசோக் செல்வன்.

இந்நிலையில் ரா கார்த்திக் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் அசோக் செல்வன் நடிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி அந்த படத்திற்கு நித்தம் ஒரு வானம் என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. கோபி சுந்தர் இசையமைக்க இருக்கும் இந்த படத்தை VIACOM 18 Studios தயாரிக்கிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக VIACOM தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது.

நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக நித்தம் ஒரு வானம் படம் உருவாகி வருகிறது என தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் வெளியிட்டார்.

’தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாசிடீவ் Vibe படம்’ - அசோக் செல்வனின் ’நித்தம் ஒரு வானம்’ பட அப்டேட் வெளியீடு

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ரிது வர்மா, அபர்னா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா போன்றோர் நடிக்கின்றனர்.

முன்னதாக நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குநர் ரா கார்த்திக் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக இருந்த வான் படத்தை படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. அதில் துல்கருக்கு ஜோடியாக க்ரிதி கர்பந்தா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories