சினிமா

50% ஆடியன்ஸ் வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா : 50 நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

2021ம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் முன்னிலை வகிக்கிறது.

50% ஆடியன்ஸ் வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா : 50 நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Stylish icon என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜூனின் புஷ்பா - தி ரைஸ் (part 1) படம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வெளியானது.

செம்மரக்கடத்தல் தொடர்பான புஷ்பா படத்தை சுகுமாறன் இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் என பலரும் நடைத்திருந்தனர்.

50% ஆடியன்ஸ் வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா : 50 நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

படம் வெளியான நாள் தொட்டு இன்றளவிலும் புஷ்பா பட பாடல்கள், வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருப்பதோடு இன்ஸ்டாகிராமிம் ரீல்ஸ்களும் பறக்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இப்படி இருக்கையில் படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த 50 நாட்களில் உலகளவில் 365 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை புஷ்பா படம் படைத்துள்ளது.

50% ஆடியன்ஸ் வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா : 50 நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக இந்தி பதிப்பில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 50 நாட்களை கடந்து இன்றளவிலும் திரையரங்கில் வெறும் 50% பார்வையாளர்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இது அல்லு அர்ஜூன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலின் மிகப்பெரிய சாதனையாகவும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோக, புஷ்பா படத்தின் எதிரொலியாக அண்மை நாட்களாக செம்மரங்களை கடத்துவோரை போலிஸார் கைது செய்யும் நிகழ்வும் தொடர்கிறது.

மேலும் 2021ம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் முன்னிலை வகிக்கிறது. #50DaysForBlockbusterPushpa என்ற ஹேஷ்டெக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது.

முன்னதாக தெலுங்கு மொழியை முதன்மையாகக் கொண்டு மற்ற மொழிகளில் வெளியிடப்பட்ட பாகுபலி படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories