சினிமா

மக்கள் நலமன்றம் பெயரில் உணவு சேவை: நெகிழ்ச்சியடைய வைக்கும் நடிகர் கார்த்தி ரசிகர்களின் செயல் !

மக்கள் நலமன்றம் பெயரில் உணவு சேவை: நெகிழ்ச்சியடைய வைக்கும் நடிகர் கார்த்தி ரசிகர்களின் செயல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் தனது அண்ணனும் நடிகருமான சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனை போன்று உழவன் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பல்வேறு நலன்களை நடிகர் கார்த்தி புரிந்து வருகிறார். மேலும் தனது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் நன்கொடை வழங்குவது விருதுகள் வழங்குவது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார் கார்த்தி.

மக்கள் நலமன்றம் பெயரில் உணவு சேவை: நெகிழ்ச்சியடைய வைக்கும் நடிகர் கார்த்தி ரசிகர்களின் செயல் !

இந்த நிலையில், தனது ரசிகர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது என்னவெனில், மலிவான விலையில் தரமான உணவுகளை விற்கும்படி அறிவுறுத்தியுள்ளாராம். அவ்வண்ணமே கார்த்தியின் ரசிகர்களும் Karthi Fans club food centre என்ற பெயரில் தள்ளுவண்டியில் வைத்து உணவு கடையை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. மேலும் கார்த்திக்கும் அவரது ரசிகர்களுக்கும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கார்த்தி ரசிகர்களின் உணவு வண்டியில் சாப்பிடும் மக்களும் அவர்களை பாராட்டுவதில் தவறவில்லை.

banner

Related Stories

Related Stories