சினிமா

”அவங்க சந்தோஷமா இருந்தா போதும்” - சமந்தாவுடனான பிரிவு குறித்து மவுனம் கலைத்த நாக சைதன்யா!

”அவங்க சந்தோஷமா இருந்தா போதும்” - சமந்தாவுடனான பிரிவு குறித்து மவுனம் கலைத்த நாக சைதன்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கும் சமந்தா டோலிவுட்டின் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார்.

மூன்று ஆண்டு திருமண வாழ்வுக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்வதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது இருவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சமந்தா சைதன்யா ஜோடியின் விவாகரத்து குறித்து இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மேலும் விவாகரத்துக்கு பிறகு தான் எப்படி மீண்டு வந்தேன் என சமந்தா அவ்வப்போது பொதுவெளியில் பேசி வந்தார்.

ஆனால் சைதன்யாவிடம் இருந்து எந்த தகவலும் வராது இருந்தது. இந்நிலையில், அண்மையில் நடந்த பங்கார்ராஜு படத்தின் விழாவின் போது சமந்தாவுடனான பிரிவு குறித்து நாக சைதன்யா முதல்முறையாக மவுனம் கலைத்திருக்கிறார்.

அது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “நாங்கள் பிரிந்தது பரவாயில்லை. எங்கள் இருவரின் நலனை கருதி எடுக்கப்பட்ட முடிவு. அதுதான் சிறந்த முடிவும் கூட. அவர் (சமந்தா) மகிழ்ச்சியாக இருந்தால் போதும். நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.” என நாக சைதன்யா கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories