சினிமா

பொங்கலுக்கு முன்பே தியேட்டரில் ரிலீஸாகும் வலிமை - வைரலாகும் டிக்கெட்!

வலிமை ட்ரெய்லர் இன்று ரிலீஸாக இருக்கும் நிலையில் படத்தின் தியேட்டர் டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொங்கலுக்கு முன்பே தியேட்டரில் ரிலீஸாகும் வலிமை - வைரலாகும் டிக்கெட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயே நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வெளியாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து படத்தின் புரோமோஷன் வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அண்மையில் இயக்குநர் ஹெச்.விநோத் பத்திரிகையாளர்களிடம் வலிமை ஷுட்டிங், அஜித், யுவன் சங்கர் ராஜா குறித்தெல்லாம் பேசியது வைரலானது.

இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறதாம். இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை ட்ரெய்லர் ரிலீஸாக இருக்கிறது.

பொங்கலுக்கு முன்பே தியேட்டரில் ரிலீஸாகும் வலிமை - வைரலாகும் டிக்கெட்!

இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் குஷியில் ஆழ்ந்தனர் அஜித் ரசிகர்கள். மேலும் ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.

இதனிடையே வலிமை ட்ரெய்லர் நேரடியாக தியேட்டரில் வெளியாக இருப்பதால் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்குவது போல முண்டியடித்துக் கொண்டு ட்ரெய்லரை பார்க்க அஜித் ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

வலிமை ட்ரெய்லர் டிக்கெட்டை வாங்கியவர்கள் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் #ValimaiTrailerSelfie ஹேஷ்டேக்கும் இதனூடே ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories