சினிமா

அதே நாள்; அதே தேதி: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் NewYear பரிசு -ட்ரெண்டிங்கில் #ValimaiTrailerFeast

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை பட வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

அதே நாள்; அதே தேதி: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் NewYear பரிசு -ட்ரெண்டிங்கில் #ValimaiTrailerFeast
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீண்ட நெடிய காத்திருப்புக்கு பிறகு திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறது அஜித்தின் வலிமை பட குழு.

அந்த வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், 2 பாடல்கள், தீம் மியூசிக் என தொடர்ந்து அப்டேட்களாக விட்டு வந்த வலிமை படக்குழு தரப்பிடம் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், எந்த தேதியில் ரிலீஸாகும் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு இதுகாறும் விடை தெரியாமலேயே உள்ளது.

இருப்பினும் படத்தின் நாயகியாக உள்ள ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜனவரி 13ம் தேதி வலிமை படம் ரிலீஸாகும் எனக் குறிப்பிட்டிருந்தது அஜித் ரசிகர்களிடையே வைரலானது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கவில்லை.

இதனிடையே இந்த ஆண்டு முடிவதற்குள் வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று (டிசம்பர் 30) வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வலிமை ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து #ValimaiTrailerFeast என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரும் டிசம்பர் 30ம் தேதிதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories