சினிமா

”மோகன்லால் இல்லனா சுரேஷ் கோபிதான் நடிக்கன்னும்” - ப்ரித்திவிராஜின் கடுவா படத்துக்கு தடை வாங்கிய நிஜ ஹீரோ!

ப்ரித்திவிராஜின் கடுவா படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

”மோகன்லால் இல்லனா சுரேஷ் கோபிதான் நடிக்கன்னும்” - ப்ரித்திவிராஜின் கடுவா படத்துக்கு தடை வாங்கிய நிஜ ஹீரோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ப்ரித்விராஜ் நடிப்பில் ஷாலி கைலாஷ் இயக்கத்தில் வெளியீட்டுக்கு தயாராகியிருக்கும் படம் ‘கடுவா’. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உயர் போலிஸ் அதிகாரிக்கு எதிராக போராடிய ‘கடுவாகுன்னேல் குருவச்சன்’ என்பவரின் உண்மைக் கதையை மையமாக வைத்து கடுவா படம் தயாராகிறது. இந்த உண்மை கதையின் நாயகன் கடுவாகுன்னேல் குவச்சன் படக்குழுவினர் தன்னை ஏமாற்றி தனது வாழ்கையை உண்மைக்கு புறம்பாக திரைப்படமாக்கியுள்ளதாக எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

அதில், ‘‘எனது வாழ்க்கைக் கதையை படமாக்க ஏற்கனவே படக்குழுவினர் அனுமதி கேட்டனர். எனது கதாபாத்திரத்தில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும் என்றும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக என்னை சித்தரிக்கக் கூடாது என்றும் சில நிபந்தனைகளோடு அனுமதி அளித்தேன்.

ஆனால், அதை ஏற்காமல், என் கதையில் ப்ரித்திவிராஜை நடிக்க வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருக்கிறது. எனது கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. எனவே கடுவா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கடுவா படத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறினார்.

banner

Related Stories

Related Stories