சினிமா

வெறுப்பைக் கக்கியவர்களுக்கு VJ மணிமேகலை கொடுத்த பதிலடி.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு!

மணிமேகலை தனது திருமண வாழ்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெறுப்பைக் கக்கியவர்களுக்கு VJ மணிமேகலை கொடுத்த பதிலடி.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொகுப்பாளினி மணிமேகலை தனது திருமண வாழ்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகப் பணியாற்றி பிரபலமடைந்தவர் மணிமேகலை. அதைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே மணிமேகலை, ஹுசைன் என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.

மணிமேகலை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். காதல் திருமணத்திற்கு பின் இருவரும் மதம் மாறிக் கொள்ளாமல், தங்களுக்கு பிடித்தவாறு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிமேகலை தங்களுடைய திருமண நாளை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிமேகலை, ஹுசைன் இருவரும் மதங்களை கடந்து திருமண பந்தத்தில் இணைந்ததால், இவர்களின் மண வாழ்க்கை குறித்து பலரும் நெகட்டிவ்வான கமெண்ட்களை பதிவிட்டிருந்தனர்.

இதுபோன்ற எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் வென்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகப் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories