சினிமா

என் ஆட்டத்தை பார்.. நான் பழைய அடியாள்.. வெளியானது மாமனிதன், ரைட்டர் பட டீசர் ! சினி அப்டேட்ஸ்

விஜய் சேதுபதியின் மாமனிதன் மற்றும் சமுத்திரகனியின் ரைட்டர் படங்களின் டீசர் வெளியாகியுள்ளது.

என் ஆட்டத்தை பார்.. நான் பழைய அடியாள்.. வெளியானது மாமனிதன், ரைட்டர் பட டீசர் ! சினி அப்டேட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி, விஜய்சேதுபதியின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவுன் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மாமனிதன் படத்தில் ஆட்டோ ஓட்டுநர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்து - முஸ்லிம் இடையேயான மத நல்லிணக்கம், கும்பமேளா போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதோடு, அமைதியாக கேளு, என் ஆட்டத்தை பார் போன்ற வசனங்களும் இருப்பது டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே நடுத்தர குடும்ப சூழலில் சமகால அரசியலையும் படத்தில் பேசப்பட்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2019ம் ஆண்டே வெளியாக வேண்டிய பட சில பிரச்னைகள் காரணமாக தாமதாகி தற்போது வெளியீட்டுக்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இருப்பினும் டீசரில் ரிலீஸ் தேதி குறித்து ஏதும் அறிவிக்கவில்லை. குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் மாமனிதனில் நடித்துள்ளனர்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளியீட்டுக்கு தயாராகியிருக்கும் படம் ரைட்டர். சமுத்திரகனி நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநரான ஃப்ராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியிருக்கிறது ரைட்டர் படம் டிசம்பர் 24ம் தேதி திரையில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காவல் நிலையத்தில் ரைட்டராக வேலை செய்யும் சமுத்திரகனி உயரதிகாரிகளின் அழுத்தங்களை எப்படி சமாளிக்கிறார் என்றும், அவர் பணியாற்றும் காவல் நிலையத்திற்கு வரும் முக்கியமான குற்ற வழக்கை ஒட்டியும் படம் நகர்வதாக டீசர் மூலம் தெரிய வருகிறது.

banner

Related Stories

Related Stories