சினிமா

”நம் தலைமுறையை மாற்றும் பல ’ராஜாக்கண்ணு’ கதைகள் இனி வரும்” - இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு!

சூர்யாவின் ஜெய்பீம் படத்தை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

”நம் தலைமுறையை மாற்றும் பல ’ராஜாக்கண்ணு’ கதைகள் இனி வரும்” - இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது விருத்தாசலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்காக 13 ஆண்டுகளாக வாதாடி போராடி பெற்ற வெற்றிதான் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் படமாக வெளியாகியுள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமே தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் உட்பட பல தரப்பினரிடையே பெரும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திரையுலக பிரபலங்களும் ஜெய் பீம் படத்துக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் ஜெய்பீம் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த சூர்யா, இயக்குநர் ஞானவேல், ஒளிப்பதிவாளர் கதிர், 2D நிறுவனத்துக்கு பெரும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாத, பா.ரஞ்சித் வசம் இருந்த ஜெய் பீம் என்ற தலைப்பை தனது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க இந்த படத்துக்கு கொடுத்தவர் என அண்மையில் நடிகர் சூர்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories