சினிமா

நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றும் நடிகர் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!

தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றும் நடிகர் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘வலிமை’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வலிமை திரைப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தமது நீண்ட நாள் திட்டமான பைக் பயணத்தை அஜித் தொடங்கிவிட்டார். முன்னதாக பைக் பயணத்தில் நல்ல அனுபவம் கொண்ட மாரல் யாஜர்லு என்ற பெண்ணை அஜித் சமீபத்தில் சந்தித்து ஆலோசித்தார்.

இதையடுத்து வடஇந்தியவில் பைக் பயணத்தை தொடங்கிய அஜித், வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றும் நடிகர் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில் அஜித் நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories