விளையாட்டு

’என் கிட்ட எதுக்கு அத கேட்டாங்க?’ - வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் பற்றி மனம் திறந்த மொயீன் அலி !

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இங்கிலாந்து வீரர் மொயீன் அலி டெஸ்ட் சீரிஸின் போது நடந்த மறக்கமுடியாத நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

’என் கிட்ட எதுக்கு அத கேட்டாங்க?’ - வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் பற்றி மனம் திறந்த மொயீன் அலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான மொயீன் அலி அறிவித்திருந்தார்.

தற்போது ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, தன்னுடைய டெஸ்ட் ஓய்வு குறித்தும், கிரிக்கெட் பயணித்தில் மறக்க முடியாத தருணங்கள் குறித்தும் அவர் வீடியோவில் பேசியிருந்தார்.

அந்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போவதன் காரணமாகவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறேன் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய மொயீன் அலி, தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தின் போது நிகழ்ந்த மறக்கமுடியாத அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று இலங்கையுடனான 2வது போட்டியின் போது சதமடித்தது என்றும், தென்னாப்பிரிக்காவுடனான போட்டியின் போது வெகு சீக்கிரத்தில் 60 ரன்களுக்கும் மேல் அடித்தது எனக்கூறினார்.

மேலும், சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் போது அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது. அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்றும் அப்போது கொரோனா காலம் என்பதால் ரசிகர்கள் குறைவாகவே இருந்தாலும் எப்போதும் போல உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறியிருள்ளார்.

banner

Related Stories

Related Stories