சினிமா

"பாலிவுட்டில் தலைவிரித்தாடும் இனவெறி" : நடிகர் நவாசுதீன் சித்திக் 'பகீர்' குற்றச்சாட்டு!

பாலிவுட் சினிமாவில் இனவெறி இருப்பதாக நடிகர் நவாசுதீன் சித்திக் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பாலிவுட்டில் தலைவிரித்தாடும் இனவெறி" : நடிகர் நவாசுதீன் சித்திக் 'பகீர்' குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் சினிமாவில் நிறப் பாகுபாடு இருப்பதாகவும், கருப்பாக இருக்கும் பெண்கள் நாயகியாக நடிக்க முடியாது என்றும் அண்மையில் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் நவாசுதீன் சித்திக்கும் பாலிவுட் சினிமாவில் இனவெறி, நிறப் பாகுபாடு இருப்பதாகக் கூறியிருப்பது சினிமா உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய நடிகர் நவாசுதீன் சித்திக், "பாலிவுட் சினிமாவில் நட்புறவு இல்லை. இனவெறி தான் இங்கு அதிகமாக இருக்கிறது. ஒரு நடிகை கறுப்பாக இருந்தால் ஒதுக்கிவிடுகிறார்கள்.

நான் உயரம் குறைவாக இருப்பதால் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டேன். இதை எதிர்த்து நான் தொடர்ந்து போராடிக்கொண்டே சினிமாவில் இந்த அளவிற்கு வந்துள்ளேன்.

எனது நடிப்பால் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். பல பெரிய நடிகர்களும் இப்படியான இனப் பாகுபாடுகைளை சந்தித்துள்ளனர். இதை நான் ஒரு புகாராக தற்போது சொல்லவில்லை. சிறந்த திரைப்படங்கள் உருவாக வேண்டும் என்பதாலேயே இதைப் பற்றி இப்போது சொல்கிறேன்.

நன்றாக நடித்தால் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நல்ல திரைப்படங்களை உருவாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories