சினிமா

VALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் அஜித்தின் ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி 1.3 மில்லியனுக்கு மேல் பார்வையை கடந்துள்ளது.

VALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தெலுங்கில் வெளியான ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்தான் கார்த்திகேயா. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் வளர்ந்து வரும் வேலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வில்லனாக ஒப்பந்தமானார்.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் வைரலானதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி இருக்கிறது. விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகும் எனப் படக்குழு கூறியிருந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் 1 மணி நேரத்தில் 1.3 மில்லியனுக்கு மேல் பார்வையை கடந்துள்ளது.

banner

Related Stories

Related Stories