சினிமா

மீண்டும் இணையும் தேவா - தாமஸ் கூட்டணி : மாநாடு’க்கு முன்பே வெளியானது VP-ன் அடுத்த பட அப்டேட் !

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மீண்டும் இணையும் 90ஸ் பிரபலங்கள்.

மீண்டும் இணையும் தேவா - தாமஸ் கூட்டணி : மாநாடு’க்கு முன்பே வெளியானது VP-ன் அடுத்த பட அப்டேட் !
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1997ல் வெளியாகி ஹிட்டான படம் தான் ‘மின்சார கனவு’. இதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி நடித்திருந்தனர். இவர்களுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கஜோல் நடித்திருந்தார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கான மவுசு இன்றளவும் குறையாமலேயே இருக்கிறது.

குறிப்பாக பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி காம்போ விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்த காம்போவை 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைக்கவுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

மீண்டும் இணையும் தேவா - தாமஸ் கூட்டணி : மாநாடு’க்கு முன்பே வெளியானது VP-ன் அடுத்த பட அப்டேட் !

அவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிச்சா சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories