சினிமா

"ராக்கி பாய் ரிட்டன்ஸ்..!” : ரிலீஸ் தேதியை அறிவித்த KGF-2 படக்குழு!

’கே.ஜி.எஃப் 2’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரிலீஸை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

"ராக்கி பாய் ரிட்டன்ஸ்..!” : ரிலீஸ் தேதியை அறிவித்த KGF-2 படக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அதர்வாவை இயக்கும் கார்த்திக் நரேன்!

தனுஷின் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள இயக்குனர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நவரசா' படத்தில் இடம் பெற்ற ‘ப்ராஜெக்ட் அக்னி’ குறும்படம் முழு நீள திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இளம் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது, இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா மூர்த்தி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

"ராக்கி பாய் ரிட்டன்ஸ்..!” : ரிலீஸ் தேதியை அறிவித்த KGF-2 படக்குழு!

ரிலீஸ் தேதி அறிவித்த KGF 2!

யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப்’. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மற்ற இந்திய மொழி ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தனர். தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது, இதில் முன்னணி வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் எண்ட்ரியாக உள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரிலீஸை அடுத்த ஆண்டு சம்மர் வரை தள்ளிவைத்துள்ளனர். அதன்படி படம் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories