சினிமா

KGF-2 உடன் நேருக்கு நேர் போட்டியிடும் ராஜமெளலி.. வெளியானது RRR ரிலீஸ் தேதி! - சினி பைட்ஸ்

KGF-2 உடன் நேருக்கு நேர் போட்டியிடும் ராஜமெளலி.. வெளியானது RRR ரிலீஸ் தேதி! - சினி பைட்ஸ்
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022 சம்மரில் தான் RRR ரிலீஸ்?

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சமுத்திரகனி, அஜய் தேவ்கன், பிரியாமணி, ரம்யா கிருஷ்ணன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். 400 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த படத்தை வரும் அக்டோபர் 13ஆம் தேதி உலகமுழுக்க 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்த படத்தின் டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் படத்திற்கு போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா எனும் குழப்பத்தில் படக்குழு ரிலீஸை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். அதே நாளில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ள யாஷின் கேஜிஎஸ் இரண்டாம் பாகமும் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

KGF-2 உடன் நேருக்கு நேர் போட்டியிடும் ராஜமெளலி.. வெளியானது RRR ரிலீஸ் தேதி! - சினி பைட்ஸ்

லண்டனில் துவங்கியது `ராட்சஷன்' இந்தி ரீமேக்!

முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் & அமலாபால் நடித்து 2018ல் வெளியான படம் `ராட்சசன்'. த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் மிகபெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் கூட `ராட்சஷடு' எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்தப் படம், இந்தியிலும் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

இதில் விஷ்ணு விஷால் நடித்த கேரக்டரில் அக்ஷய் குமாரும், அமலா பால் நடித்த கேரக்டரில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை ரஞ்சித் எம் திவாரி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் லண்டனில் துவங்கியுள்ளது

banner

Related Stories

Related Stories