சினிமா

'காஞ்சனா 3' பட நடிகை தற்கொலை... விசாரணையில் வெளி வந்த பரபரப்பு தகவல்!

காஞ்சனா 3 பட நடிகை கோவாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'காஞ்சனா 3' பட நடிகை தற்கொலை... விசாரணையில் வெளி வந்த பரபரப்பு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா 3. இந்த படத்தில் நடிகைகள் ஓவியா, வேதிகா, நிக்கி டேம்போலி, அலெக்ஸாண்ட்ரா ஜாவி உள்ளிட்ட நான்கு நாயகிகள் நடித்திருந்தனர்.

இதில் அலேக்ஸாண்ட்ரா ஜாவி 'ரோஸி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர். பிரபல மாடல் அழகியும் நடிகையுமான அலேக்ஸாண்ட்ரா ஜாவி தனது காதலருடன் கோவாவில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழனன்று கோவாவில் வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அலேக்ஸாண்ட்ரா ஜாவின் தற்கொலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில், காதலர் பிரிந்து சென்றதால், மன அழுத்தத்திலிருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவு எடுத்தாரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை துவக்கியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories