சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அடுத்த அப்டேட்... ப்ரித்விராஜ் நடிக்கும் புதிய படம்! #CinemaUpdates

‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் வேலைகள் 90 சதவீதம் முடிந்திட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அடுத்த அப்டேட்... ப்ரித்விராஜ் நடிக்கும் புதிய படம்! #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய அப்டேட்!

மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் 90 சதவீதம் முடிந்திட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மத்திய பிரதேசம் செல்லவிருக்கின்றனர். அங்கு குவாலியர் அருகே உள்ள ஒர்ச்சா எனும் இடத்தில் நடக்கவுள்ளது. இதற்காக பிரகாஷ்ராஜ், கார்த்தி, மணிரத்தினம் உள்ளிட்டோர் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர். இந்த ஷெட்யுலோடு முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிவடைகிறது.

ப்ரித்விராஜ் நடிக்கும் புதிய படம் ‘காபா’!

ப்ரித்விராஜ் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் புதியதாக ஒரு படம் இணையவுள்ளது. இயக்குநர் வேனு இயக்கத்தில் ப்ரித்விராஜ், மஞ்சு வாரியர், சைஃப் அலி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ‘காபா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தப்புரத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்கான அறிவிப்பும், மோஷன் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories