சினிமா

பாலிவுட்டில் ரீமேக்காகும் தடம்; அருண் விஜய் கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா? வெளியானது அறிவிப்பு!

பாலிவுட் செல்லும் அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்.

பாலிவுட்டில் ரீமேக்காகும் தடம்; அருண் விஜய் கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா? வெளியானது அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அருண் விஜய் - மகிழ்திருமேனி கூட்டணியில் 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘தடம்’. இந்த படத்தை தெலுங்கில் ‘ரெட்’ எனும் தலைப்பில் ரீமேக் செய்து வெளியிட்டனர்.

அங்கு அருண் விஜய் ரோலில் ராம் பொத்தினேனி நடித்திருந்தார், தற்போது தமிழில் ஹிட்டாகும் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளதால் பல பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஹிட்டான தமிழ் படங்களின் உரிமையை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த லிஸ்டில் ஏற்கனவே கைதி, மாநகரம், விக்ரம் வேதா, கோலமாவு கோகிலா, மாஸ்டர் உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் இணைந்துள்ள நிலையில் அருண் விஜய்யின் தடம் படமும் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஆதித்யா ராய் கபூர் அருண் விஜய் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பூஷண் குமாரின் டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் முராத் கெதானியின் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை வர்தன் கேத்கர் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories