சினிமா

வீரம் பாணியை தொடரும் அஜித்; கசிந்தது 61வது படத்தின் அப்டேட் - அப்போ வலிமை ?

வீரம் பாணியை தொடரும் அஜித்; கசிந்தது 61வது படத்தின் அப்டேட் - அப்போ வலிமை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித்தின் 60வது படமான வலிமைக்காக அதே கூட்டணி இணைந்து பணியாற்றி வருகிறது. கொரோனா காரணமாக வலிமை படம் தொடர்பான எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு சுமார் 700 நாட்களுக்கும் மேலாக வெளியிடாமல் இருந்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் செல்லுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு பெரும் பரபரப்பையே அவ்வப்போது ஏற்படுத்தி வந்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் வலிமை அப்டேட்டுக்கான பதிவுகள் தொடர்ந்து பகிர்ந்த வண்ணம் இருந்தன.

இப்படி இருக்கையில், அண்மையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் டீசரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானதால் ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்ததோடு சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி தீர்த்தனர்.

இருப்பினும் வலிமை தொடர்பான மேலும் பல அப்டேட்டுகளை எதிர்ப்பார்ப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வலிமை படத்தின் இன்னபிற அப்டேட்கள் வெளியாவதற்கு முன்பே அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அஜித்தின் 61வது படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்கவிருப்பதாகவும், போனி கபூரே தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்யுள்ளது.

மேலும் வலிமை படத்தை ஆயுத பூஜையான அக்டோபர் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வலிமை ரிலீஸான கையோடு 61வது படத்துக்கான வேலைகளை படக்குழு தொடங்கும் எனவும் அதற்கான முந்தைய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளன.

banner

Related Stories

Related Stories