சினிமா

தமிழில் ரீமேக்காகும் ஆயுஷ்மானின் மற்றுமொரு படம்; கோவையில் தொடங்கியது பதாய் ஹோ ஷூட்டிங் - சினி அப்டேட்ஸ்!

தமிழில் ரீமேக்காகும் ஆயுஷ்மானின் மற்றுமொரு படம்;  கோவையில் தொடங்கியது பதாய் ஹோ ஷூட்டிங் - சினி அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நித்யா மேனன் நடிக்கும் "ஸ்கை லேப்"!

மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நித்யா மேனன். தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் இளம் நடிகர் சத்யதேவ் உடன் இணைந்து ஒரு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘ஸ்கை லேப்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாக் கந்தேராவ் இயக்கி வரும் இந்த படத்தில் ராகுல் ராமகிருஷ்ணா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். கோலிவுட் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ராஜமௌலியின்‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ..!

பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து எஸ்.எஸ்.ராஜமௌலி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த படத்திற்கு 400 கோடிக்கு மேல் படக்குழு செலவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக பல சிக்கல்களை சந்தித்து ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. தமிழில் ரத்தம் ரணம் ரௌதிரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் உலகமெங்கும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிசத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுடில் இருந்து அஜய்தேவ்கன், ஆலியாபட் நடிக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ‘ரோர் ஆஃப் ஆர்.ஆர்.ஆர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த மேக்கிங் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பட தமிழ் ரீமேக்கில் இணையும் சத்யராஜ் - ஊர்வசி காம்போ...

மலையாளத்தில் 1994ல மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பவித்ரம்’. இந்த கதையை இன்ஸ்பிரேஷனாக எடுத்து, 2018ல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பாலிவுட் படம் தான் ‘பதாய் ஹோ’. Amit Sharma இயக்கிய இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதில் ஆயூஷ்மான் நடித்த கேரக்டரில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி பாலாஜி தான் இந்த படத்தை இயக்கவும் செய்கிறார். படத்துக்கான ஷூட்டிங்க கோயம்பத்தூர்ல தொடங்கியுள்ளது.

ஒரேகட்டமாக இந்த படத்துக்கான ஷூட்டிங்கை நடத்தி முடிக்க திட்டமுட்டுள்ளார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம், வயதான தம்பதியா வருபவர்கள் தான் அதனால் அந்த கேரக்டரில் நடிக்க சத்யராஜ் மற்றும் ஊர்வசியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பாலாஜிக்கு அப்பா, அம்மாவாக நடிக்கவுள்ளார்கள். மூக்கித்தி அம்மன் படத்தில் ஏற்கனவே ஊர்வசி பாலாஜிக்கு அம்மாவாக நடித்துள்ளதால் இவர்கள் காம்போ இதிலும் கைக்கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories