சினிமா

இரண்டு பாகங்களாக வெளியாகும் ’துருவ நட்சத்திரம்’.. 'சார்பட்டா பரம்பரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு! #CineUpdates

துருவ நட்சத்திர படத்தை இரண்டு பாகமாக வெளியிட இயக்குனர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.

இரண்டு பாகங்களாக வெளியாகும் ’துருவ நட்சத்திரம்’.. 'சார்பட்டா பரம்பரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு! #CineUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துருவ நட்சத்திரம் இரண்டு பாகமாக ரிலீஸ்!

விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படம் துருவ நட்சத்திரம். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பார்த்திபன், ராதிகா, ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2018-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த இந்தப் படம் கௌதம் மேனனுக்கு இருந்த பணப்பிரச்சனை காரணமாக இன்னும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கூட முடியாமல் உள்ளது.

படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர்கள் ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் படத்தை வெளியிட ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை இரு பாகங்களாக வெளியிட படக்குழு கலந்தாலோசித்து வருதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இது சம்மந்தமான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் ’துருவ நட்சத்திரம்’.. 'சார்பட்டா பரம்பரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு! #CineUpdates

சார்பட்டா பரம்பரை ஓடிடி ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘சார்பட்டா பரம்பரை’. சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிருந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றோடு தொடர்புடைய கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆர்யாவிற்கு இந்தப் படம் கோலிவுட்டில் இன்னும் அதிகமான ரசிகர் கூட்டத்தை தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆர்யா நடித்து வெளியான மகாமுனி, டெடி என இரண்டு படங்களும் ஹிட்டாகியுள்ளதால் இந்தப் படம் அவருக்கு தொடர் வெற்றியை தேடித் தருமா எனும் ஆவலும் உடன் தொற்றியுள்ளது.

banner

Related Stories

Related Stories