சினிமா

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்; மீண்டும் தொடங்கியது புஷ்பா ஷூட்டிங்! - சினி துளிகள்

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்; மீண்டும் தொடங்கியது புஷ்பா ஷூட்டிங்! - சினி துளிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்!

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு மான்ஸ்டர் மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் திரையுலகில் நல்ல வரவேற்பை வாங்கிக் கொடுத்துள்ளது. இப்போது கசட தபற, குருதியாட்டம் போன்ற படங்கள் இவரின் நடிப்பில் உருவாகியுள்ளது. இது தவிர பொம்மை, ஹாஸ்டல், இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஒரு படம் என படங்களின் பட்டியல் நீண்டுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் இவர் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் வரும் ஆகஸ்டில் இருந்து துவங்க உள்ளது. இந்த படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு தற்போது தீவிர்மாக நடந்து வருகிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்; மீண்டும் தொடங்கியது புஷ்பா ஷூட்டிங்! - சினி துளிகள்

மீண்டும் துவங்கியது ‘புஷ்பா’ பட ஷூட்டிங் வேலைகள்...

டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் இப்போது நடித்து வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார், செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூன் லாரி ட்ரைவராக நடித்து வருகிறார். கூடவே மலையாள நடிகர் பகத் ஃபாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். 30 நாட்கள் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த 30 நாள் ஷெட்யூலோடு இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவுக்கு வரவுள்ளது.

banner

Related Stories

Related Stories