சினிமா

’சூர்யா40’ படத்திற்காக 50 நாட்கள் ஒரே இடத்தில் ஷூட்டிங்... Sony LIVல் சிவகார்த்திகேயன் படம்! #CineUpdates

‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

’சூர்யா40’ படத்திற்காக 50 நாட்கள் ஒரே இடத்தில் ஷூட்டிங்... Sony LIVல் சிவகார்த்திகேயன் படம்! #CineUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஐம்பது நட்கள் ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்தவிருக்கும் ‘சூர்யா 40’ படக்குழு!

‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூர்யா 40’ படமும் ஒன்று. சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் மீதமிருக்கும் ஷூட்டிங் வேலைகள் ஜூலை 12ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்காக காரைக்குடியில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து கிட்டத்தட்ட 30 நடிகர், நடிகைகளை கொண்டு 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் தான் சூர்யா 40 படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

’சூர்யா40’ படத்திற்காக 50 நாட்கள் ஒரே இடத்தில் ஷூட்டிங்... Sony LIVல் சிவகார்த்திகேயன் படம்! #CineUpdates

டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாரான சிவகார்த்திகேயன் படம்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் நல்ல கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவரின் தயாரிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் அருவி பட இயக்குனர் அருண் பிரபுவின் ‘வாழ்’. கிட்டத்தட்ட 100 வேற வேற இடங்களில் 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ‘வாழ்’, தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

புதுமுக நடிகர்கள் பிரதீப், பானு, தீவா, யாத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் சென்சார் வேலைகள் முடிந்துள்ளன. தற்போது இருக்கும் சூழலில் தியேட்டர் ரிலீஸ் என்பது பெரும் கேள்விக்குறியானது என்பதால் படத்தை நேரடியாக ஓ.டி.டி-யிலேயே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ‘வாழ்’ படத்தை சோனி லிவ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது, வரும் 16ஆம் தேதி இந்த படம் சோனி லிவ் தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை சோனி லிவ் தளம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories