சினிமா

தனுஷ் பிறந்தாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்... ஷங்கர் மீதான வழக்கு ரத்து! #CineUpdates

தனுஷ் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் பிறந்தாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்... ஷங்கர் மீதான வழக்கு ரத்து! #CineUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இயக்குனர் ஷங்கர் மீதான வழக்குகள் தள்ளுபடி!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படத்தின் பணி, பல பிரச்சனைகள் காரணமாக பாதியில் நின்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இது ஒருபக்கம் இருக்க ஷங்கர் தனது அடுத்த படங்களுக்கான வேலைகளை துவங்கியது ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வந்த லைகாவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘இந்தியன் 2’ பட வேலைகளை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த மொழி படத்தையும் ஷங்கர் இயக்கக்கூடாது என்பதே அந்த வழக்கின் முக்கிய கோரிக்கை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இயக்குனர் ஷங்கர் மீது லைகா தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் தடை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் ‘இந்தியன் 2’ படம் கேள்விக்குறியாகியுள்ளது.

தனுஷ் பிறந்தாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்... ஷங்கர் மீதான வழக்கு ரத்து! #CineUpdates

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகவிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது மார்கெட்டை விரிவுபடுத்தி விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். கடந்த மாதம் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ பட ஷூட்டிங்கை முடித்து சென்னை வந்தவர் தற்போது அவரது 43வது படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் நரேன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 28ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால், அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த போஸ்டர் ரிலீஸை படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories