சினிமா

OTT செல்லும் ‘சர்பட்டா பரம்பரை’.. ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆர்யா நடித்துள்ள 'சர்பட்டா பரம்பரை' ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

OTT செல்லும் ‘சர்பட்டா பரம்பரை’.. ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அட்டகத்தி, மெட்ராஸ் படங்கள் மூலமாக தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்கள் கொடுத்தார். அந்தப் படங்கள் இவருக்கு முன்னணி இயக்குனர் எனும் அங்கீகாரத்தை வழங்கியது.

இயக்குனராக தன்னை முன்னிறுத்தி வந்தவர் பின்னர் ஒரு தயாரிப்பாளராகவும் களம் கண்டார். அப்படி இவரது தயாரிப்பில் வெளியான படங்கள்தான் பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு ஆகியவை. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

காலா படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவார் என பரவலாக பேசப்பட்டது, அதற்கான ப்ரீ ப்ரோடக்‌ஷன் வேலைகளும் துவங்கின, ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதால் இடையில் வேறொரு படத்தை இயக்கத் தயாரானார். அதுதான் ஆர்யா நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் ‘சர்பட்டா பரம்பரை’.

ஆர்யா, துஷாரா, கலையரசன், பசுபதி, சுந்தர், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திரையரங்கில் வெளியாகும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் சூழ்நிலை காரணமாக ஓ.டி.டியில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெசான் ப்ரைமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories