சினிமா

நடனப் பயிற்சியை இப்போதே துவங்கிய பூஜா ஹெக்டே: ரசிகரின் எதிர்ப்பார்ப்பை கூட்டும் ‘பீஸ்ட்’ !

‘பீஸ்ட்’ படத்திற்கான நடனப்பயிற்சியை நடிகை பூஜா ஹெக்டே துவங்கியுள்ளார்.

நடனப் பயிற்சியை இப்போதே துவங்கிய பூஜா ஹெக்டே: ரசிகரின் எதிர்ப்பார்ப்பை கூட்டும் ‘பீஸ்ட்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘புட்டபொம்மா’ பாடலின் மூலமாக இந்தியளவில் டிரெண்டிங்கான நடிகை பூஜா ஹெக்டே. இப்போ, ஹைதராபாத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ பட ஷூட்டிங்கிள் கவாணம் செலுத்தி வருகிறார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிய உள்ளது.

இதனை தொடர்ந்து விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் கலந்துக்கொள்ள உள்ளார். இதற்கான நடன பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதாக பூஜா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது. அதில் விஜய், பூஜா இசையேயான காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனர். அதற்காக தான் பூஜா இப்போதே பயிற்சியை துவங்கிவிட்டார்.

நடனப் பயிற்சியை இப்போதே துவங்கிய பூஜா ஹெக்டே: ரசிகரின் எதிர்ப்பார்ப்பை கூட்டும் ‘பீஸ்ட்’ !

பொதுவாகவே விஜய் படங்கள் என்றால் பாடலுக்கும் நடனத்துக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்த நிலையில் பூஜாவின் இந்த பதிவு அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் குறித்த எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories