சினிமா

தியேட்டரில் மட்டுமே ‘சினம்’... ரிலீஸ் தேதியை முடிவு செய்த‘டாக்டர்’ படக்குழு? : சினிமா துளிகள்!

‘சினம்’ படத்தை திரையரங்கில் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.

தியேட்டரில் மட்டுமே ‘சினம்’... ரிலீஸ் தேதியை முடிவு செய்த‘டாக்டர்’ படக்குழு? : சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாஃபியா படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் படம் ‘சினம்’. ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பாலக் லால்வானி ஜோடியாக நடித்துள்ளார்.

அருண்விஜய் திரைப்பயணத்தில் 30வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தும் தியேட்டர் திறக்கததால் ஓடிடி ரிலீஸுக்கு செல்வதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து அப்போது எந்த மறுப்பும் தெரிவிக்காததால் படம் நேரடியாக ஓடிடியில் தான் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், சினம் திரையரங்கில் தான் வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளார் அருண் விஜய். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுது. இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜய் பாக்ஸர், ஜிந்தாபாத், அக்னி சிறகுகள், பார்டர் என வரிசையாக படங்களை ரிலீஸுக்கு தயார் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தியேட்டரில் மட்டுமே ‘சினம்’... ரிலீஸ் தேதியை முடிவு செய்த‘டாக்டர்’ படக்குழு? : சினிமா துளிகள்!

அடுத்த ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் ‘டாக்டர்’ படக்குழு...

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் ‘டாக்டர்’. அனிரூத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை வெளியிட காத்திருந்த படக்குழுவிற்கு கொரோனா இரண்டாம் அலை சிக்கலாக அமைந்தது.

இதனால் படத்தின் தியேட்டர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே படம் டிஜிட்டலில் வெளியாகவிருப்பதாக பரவலாக பேசப்பட்டது, ஆனால் டாக்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு தெளிவாக விளக்கம் கொடுத்தது, இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டு வருவதால் விரைவில் திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கும் எனும் நம்பிக்கை உருவாகியுள்ளது.

இதனால் ‘டாக்டர்’ படத்தை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுந்தந்திர தின ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories