சினிமா

OTT-ல் வெளியாகும் நடிகை டாப்ஸியின் ‘ராஷ்மி ராக்கெட்’.. ரசிகர்கள் உற்சாகம்!

நடிகை டாப்ஸியின் `ராஷ்மி ராக்கெட்' படம் ஓடிடியில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது.

OTT-ல் வெளியாகும் நடிகை டாப்ஸியின் ‘ராஷ்மி ராக்கெட்’.. ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ல் டாப்ஸி நடிச்சு பட்லா, கேம் ஓவர், மிஷன் மங்கள், சாந்த் கி ஆன்க்' என நான்கு படங்கள் வெளியானது. 2020ல தப்பட் ரிலீஸ் ஆனது. எல்லாமே சூப்பர் ஹிட். 'ஹசீனா தில்ருபா', 'ராஷ்மி ராக்கெட்' படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.இதில் `ஹசீன் தில்ருபா' வினில் மேத்திவ் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது, இந்தப் படத்தில் டாப்ஸி உடன் ஆதித்யா ஸ்ரீவத்சவா, விக்ராந்த் மெஸ்ஸி, ஹர்சவர்தன் ரானே என பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் ஜூலை 2ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து டாப்ஸியின் இன்னொரு படமும் ஓடிடி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. நந்தா பெரியசாமி கதை எழுதி, அகர்ஷ் கருணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் `ராஷ்மி ராக்கெட்' படம்தான் அது. இந்தப் படத்தில் டாப்ஸியுடன் அபிஷேக் பேனர்ஜி, ப்ரியன்ஷு, சுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் நேரடியாக அமேஸான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்ததாக `ரன் ரோலா ரன்' பட இந்தி ரீமேக், மித்தாலி ராஜ் பயோ பிக் 'சபாஷ் மித்து' ஆகிய படங்களும் டாப்ஸி கைவசம் உள்ளது.

banner

Related Stories

Related Stories