சினிமா

OTTக்கு செல்லும் முன்னணி மலையாள ஹீரோக்களின் படங்கள்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

கேரள முன்னணி நாயகர்களின் படங்கள் ஓ.டி.டியில் வெயிடப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

OTTக்கு செல்லும் முன்னணி மலையாள ஹீரோக்களின் படங்கள்.. ரசிகர்கள் ஏமாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இப்போது இருக்கும் சூழலால் படங்கள் முடங்கிடக்கூடாது என்பதால், ஓடிடியில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்போது அந்த லிஸ்ட்டில் மலையாளத்தில் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட ரெண்டு படங்கள் இணைந்திருக்கிறது. முதல் படம் தனு பாலக் இயக்கத்தில் ப்ரித்விராஜ், `அருவி' அதிதி பாலன் நடிச்சிருக்கும் `கோல்ட் கேஸ்'.

இந்தப் படம் போன வருடம் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. ப்ரித்விராஜ் போலீஸ் ரோலில் நடித்திருக்கும் த்ரில்லர் படம் இது. இன்னொரு படம் மகேஷ் நாராயணன் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் `மாலிக்'. இதில் Nimisha Sajayan, Joju George, Dileesh Pothan என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.

நிஜ கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான ரோலில் ஃபகத் பாசில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதை இந்தப் படங்களுடைய தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் அறிவித்திருக்கிறார். "இந்தப் படங்களை இப்படியே வெச்சிருந்த பெரிய நஷ்டம் வர வாய்ப்பிருக்கு, அதனால ஓடிடி ரிலீஸ்க்கு போறேன்" என சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படங்கள் எந்த ஓடிடி தளத்தில் வரும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

banner

Related Stories

Related Stories