சினிமா

விக்ரமின் 60 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் : கதை என்ன தெரியுமா?

நடிகர் விக்ரம் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரமின் 60 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் : கதை என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் பெரிய வெற்றியடையவில்லை. ஆனால் அவரோட அடுத்தடுத்த படங்கள் நம்பிக்கை கொடுக்கும் படியாக இருக்கிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா. Psychological Thrillerராக உருவாகும் இந்தப் படம் பெரிய பட்ஜெடில் உருவாகிறது. இதனுடைய டீசர் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்துடைய டீசர், ட்ரைலர் வெளியாகி ரொம்ப வருஷம் ஆன நிலையில் படம், தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக இன்னும் வெளிவராமலே இருக்கிறது. வெளியானாதும் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இது மணிரத்னத்தின் கனவுப் படமாக உருவாகிறது. மிகப்பெரிய பட்ஜெடில் தயாராகி வருகிறது இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கிறார் விக்ரம்.

கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரமின் 60-வது படத்தை இயக்க இருக்கார். இந்தப் படத்தில் விக்ரம் உடன் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கிறார். இது கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்து மேலும் ரசிகர்கள்கிட்ட பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

banner

Related Stories

Related Stories