சினிமா

இந்தி மாஸ்டர் படத்தில் சல்மான் கான்? - நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகும் ‘ஹசீன் தில்ருபா’ : சினிமா துளிகள்!

அடுத்த மார்ச்சில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு!

இந்தி மாஸ்டர் படத்தில் சல்மான் கான்? - நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகும் ‘ஹசீன் தில்ருபா’ : சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அடுத்த மார்ச்சில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர். பெரிய எதிர்பார்ப்பும், இடைவெளிக்கும் பின்னால் வெளியான மாஸ்டர் எதிர்பார்த்தத விட மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

இந்தநிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்ல சல்மான் கான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்பு மாஸ்டர் ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது சல்மான் கான் நடிக்க இருக்கதாக சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் இதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என தகவல்கள் பரவி வருது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரமே வெளிவரலாம். சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான `ராதே' படத்திற்கு சல்மான் கான் ரசிகர்கள் மத்தியில் கூட வரவேற்பு இல்லை. ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் இன்னும் மோசமான ரியாக்ஷன் தான் வந்தது. இந்தநிலையில தான் சல்மான் இந்த மாஸ்டர் ரீமேக் பிளானை கையில் எடுத்திருக்கிறார்.

இந்தி மாஸ்டர் படத்தில் சல்மான் கான்? - நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகும் ‘ஹசீன் தில்ருபா’ : சினிமா துளிகள்!

தமிழ், தெலுங்கு, இந்தி என பரபரப்பாக படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார் டாப்ஸி. இவர் நடித்து கடைசியாக ரிலீஸ் ஆன படம் `தப்பட்'. அந்தப் படத்துக்குப் பிறகு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகலையே தவிர இவங்க வரிசையா கமிட் செய்த படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவங்க கமிட் பண்ணி நடிச்சு முடித்திருக்கும் படங்களில் ஒன்று `ஹசீன் தில்ருபா'. வினில் மேத்திவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் டாப்ஸி உடன் ஆதித்யா ஸ்ரீவத்சவா, விக்ராந்த் மெஸ்ஸி, ஹர்சவர்தன் ரானே, ஹன்சிகா மோத்வானி என பலரும் நடித்திருக்கிறார்கள். 2019ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்துடைய ஷூட்டிங் போன வருடம் அக்டோபர் மாதம் மும்பையில் முடிக்கப்பட்டது.

கொரோனாவுக்கு முன்னாலயே தொடங்கப்பட்டதால், படத்தை முடித்து போன வருடம் செப்டம்பர் மாதமே ரிலீஸ் செய்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக அது முடியாமல் போனது. உடனடியாக நெட்ஃப்ளிக்ஸில் நேரடி ரிலீஸ் என சொல்லப்பட்டது. சமீபத்தில் படத்தோட டீசர் ரிலீஸ் செய்திருந்தார்கள். இப்போது படத்துடைய டிரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஜூலை 2ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள் நெட்ஃப்ளிக்ஸ்.

இந்தி மாஸ்டர் படத்தில் சல்மான் கான்? - நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகும் ‘ஹசீன் தில்ருபா’ : சினிமா துளிகள்!

தனது பெயரில் மோசடி செய்வதாக நடிகர் சார்லி புகார்!

தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் சார்லி. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில், இவர் நடித்த பல காட்சிகளை பார்த்து நாம் ரசித்திருப்போம். நகைச்சுவை நடிகராக மட்டுல்லாமல் கிருமி, வெள்ளைப்பூக்கள், மாநகரம் மாதிரி படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் சார்லி.

இந்தநிலையில் நடிகர் சார்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அது என்ன என்றால், தன்னுடைய பெயரில் போலி சமூக வலைத்தள கணக்கு தொடங்கி மோசடி செய்கிறார்கள் என்பதுதான் அந்த புகார். நேற்று காலையில் சார்லியின் பெயரில் ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டிருந்ததை பலரும், அவருடைய ட்விட்டர் அக்கௌண்ட் தான் என நினைத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த போலி கணக்கு பற்றி காவல் ஆணையர் அலுவலகத்தில் இப்போது நடிகர் சார்லி புகார் கொடுதிருக்கிறார். இந்த செய்தி இப்போ ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories