சினிமா

ஜி.வி.பிரகாஷை கவர்ந்த 'பூம்பூம்' மாட்டுக்காரர்... ரெக்கார்டிங்குக்கு தயார் என அறிவிப்பு!

பூம்பூம் மாட்டுக்காரருக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பளித்ததையடுத்து, ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷை கவர்ந்த 'பூம்பூம்' மாட்டுக்காரர்... ரெக்கார்டிங்குக்கு தயார் என அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். என்னதான் இவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவரை இசையமைப்பாளராகவே பலருக்கும் பிடிக்கும். அதிலும் அசுரன் படத்துக்குப் அடுத்து இவருடைய இசையை எதிர்பார்ப்பவர்கள் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சாலையோரத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் ஒருவரின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ், "இந்த நபரைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக இவருடைய நோட்ஸ் ரொம்ப துல்லியமாகவும் இருக்கிறது" எனச் சொல்லியிருந்தார். அவரைக் கண்டுபுடித்த ஒருவர், அவருடைய பெயர் நாராயண் எனச் சொல்லி அவருடைய மொபைல் நம்பரையும் பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், கண்டுபுடித்தவருக்கு நன்றி சொல்லி, சீக்கிரம் அவருடன் ரெக்கார்டிங் செய்ய முடியும் என நம்புறேன் என்று சொல்லியிருக்கிறார். ஏழ்மையான திறமைசாலிக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு கொடுக்க முன்வந்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories