சினிமா

36 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் ஆகும் 'ஆண் பாவம்' ?

'ஆண் பாவம்' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது.

36 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் ஆகும் 'ஆண் பாவம்' ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1985ல வெளியான படம் `ஆண் பாவம்'. இயக்குநர் பாண்டியராஜனின் இரண்டாவது படமாக உருவானது. கூடவே இந்தப் படம் மூலமாக தான் நடிகராக அறிமுகமானார் பாண்டியராஜன். இந்தப் படம் இப்போது வரை ரசிகர்கள் மத்தியில மிகப் பிரபலமான ஒன்று.

36 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகப் போறதாக ஒரு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இந்தப் படத்தை பாண்டியராஜன் அவருடைய மகன் ப்ரித்வியை நடிக்க வைத்து ரீமேக் செய்வதாக பல வருடம் முன்பு சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களாக, அஜய் தேவ்கனும் - அக்ஷய் குமாரும் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தி சினிமாவின் கமர்ஷியல் படங்கள் கொடுப்பதில் கிங் ரோஹித் ஷெட்டி, அவர் தான் இந்த ரீமேக்கை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள்தான் இதை உறுதிபடுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories