சினிமா

கடைக்குட்டி சிங்கம் போல் கிராமத்து ஹீரோவாக சூர்யா -கார்த்தி பிறந்த நாளில் S40 அப்டேட் கொடுத்த இயக்குநர்!

கடைக்குட்டி சிங்கம் போல் கிராமத்து ஹீரோவாக சூர்யா -கார்த்தி பிறந்த நாளில் S40  அப்டேட் கொடுத்த இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவுடைய 40வது படத்தை இப்போது இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் கார்த்தியுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்த பாண்டிராஜ், நடிகர் சூர்யாவோட 40வது படம் பற்றிய அப்டேட்டையும் சொல்லியிருக்கிறார்.

கார்த்தியோட கடைக்குட்டி சிங்கம் எப்படி அவருடைய ரசிகர்களுக்கு சிறப்பான படமாக அமைந்ததோ அதேமாதிரி இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கு அமையும் என தெரிவித்திருக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம் போல் கிராமத்து ஹீரோவாக சூர்யா -கார்த்தி பிறந்த நாளில் S40  அப்டேட் கொடுத்த இயக்குநர்!

அதுமட்டுமில்லாமல் படத்தோட டைட்டிலில் இருந்து ஒவ்வொரு லுக் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருவதாகவும் இதன் மூலமாக சூர்யா ரசிகர்களுக்கு சிறப்பான படத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சமீப காலங்களில் சூர்யா கிராமத்து கெட்டப்பில் அதிரடி காட்டி வரும் நிலையில், இந்த படமும் அதேமாதிரி ஒரு வித்தியாசமான சூர்யாவை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தில் ப்ரியங்கா மோகான், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசுனு பலரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்து மூலமாக முதன் முறை சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்.

banner

Related Stories

Related Stories