சினிமா

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7ல் இணைகிறாரா பிரபாஸ்? - வைரல் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்!

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7ல் இணைகிறாரா  பிரபாஸ்? - வைரல் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் பட சீரிஸ்க்கு உலகம் முழுக்க மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. 1996லிருந்து துவங்கி இதுவரை 6 பார்ட்களாக இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. இப்போது இந்தப் படத்தின் ஏழாவது பாகம் உருவாகி வருகிறது. மிஷன் இம்பாசிபிளின் முந்தைய மூன்று பாகங்களை இயக்கிய Christopher McQuarrie தான் ஏழாவது பாகத்தை இயக்கிவருகிறார்.

மிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிகர் பிரபாஸ் நடிக்கப்போவதாக தகவல்கள் வைரலாகியது. இந்தநிலையில் அதுதொடர்பாக அந்த படத்தின் இயக்குநரே போட்ருக்கும் ட்வீட் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சிய கொடுத்திருக்கு. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இணையாக டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் சீரிஸ் படங்களும் உலகளவுல பிரபலமானது.

அதனால் இதில் நடிகர் பிரபாஸ் நடிக்க இருப்பதாக வந்த தகவல்கள் வைரலாக ஆரம்பித்தது. மிஷன் இம்பாசிபிள் படத்தை இயக்கி வரும் Christopher McQuarrie தன்னுடைய ட்விட்டர் பக்கத்துல, வைரலான இந்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், நடிகர் பிரபாஸ் திறமையான நடிகர். ஆனால் இந்த படம் தொடர்பாக அவரை இதுவரைக்கும் சந்தித்தது இல்லை என சொல்லியிருக்கிறார். இதனால் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.

1999ல் வெளியான மேட்ரிக்ஸ் படத்திற்கும் அதனுடைய அடுத்தடுத்த பார்ட்களுக்கும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இப்போது நான்காவது பார்ட்டுக்கான வேலைகள் நடந்து கொண்டு வருகிறது. இந்த படத்தில் Keanu Reeves மற்றும் Carrie-Anne Moss ஆகியோருடன் சேர்த்து ஃப்ரோஸன் பட நடிகர் Jonathan Groff-ம் நடிக்கிறார். டைரக்டர் Lana Wachowski இயக்கும் இந்தப் படத்தில் நியோ என்ற கேரக்டரில் நடிகர் பிராட் பிட் நடிக்க, பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஒரு முக்கியமான கேரக்டரில் ந டிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7ல் இணைகிறாரா  பிரபாஸ்? - வைரல் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்!

கடந்த ஆண்டு தொடங்கிய படத்துக்கான ஷூட்டிங் வேலைங்கள் San Franciscoவில் நடந்து வந்த போது கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங்க பாதியிலையே நிறுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் San Francisco-வில் ஷூட்டிங் தொடங்கிட்டார்கள், நிறைய பொருட்செலவுல இந்த படத்துக்கான ஷூட்டிங் அங்க நடந்து வருகிறது.

வார்னர் ப்ரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஏற்கனவே வைரலாகியிருந்தது. இதனால சுதாரிச்ச படக்குழு கடுமையான கட்டுப்பாடுகளோடு இந்த படத்துக்கான ஷூட்டிங் இப்போது நடத்து வருகிறது. படத்தை 2021 டிசம்பர் 22ல தேதி ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories