சினிமா

மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கூட்டணி? 65வது படத்தின் அப்டேட்? விஜய் தரப்பு கூறும் அண்மை தகவல்!

மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கூட்டணி? 65வது படத்தின் அப்டேட்? விஜய் தரப்பு கூறும் அண்மை தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாஸ்டர் படத்தோட ஹிட்டைத் தொடர்ந்து விஜய் தன்னோட 65வது படத்துக்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரோட கூட்டணி அமைந்திருக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துல விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடத்த காத்திருக்கிறார்கள். இப்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை சரியானதும் விஜய் 65 பட வேலைகள் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையில விஜய் நடிக்க இருக்க 66வது படம் பத்தின செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்தப் படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க போவதாகவும் பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது.

மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கூட்டணி? 65வது படத்தின் அப்டேட்? விஜய் தரப்பு கூறும் அண்மை தகவல்!

இது சம்மந்தமாக சென்னை வந்து விஜய்யை சந்தித்து கதை சொல்லி சென்றிருக்கிறார் வம்சி என பரவலாக பேசப்படுகிறது. ஆனா, இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய் தன்னுடைய 66வது படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்திருப்பதாகவும், வம்சி இயக்கப் போவது 67வது படம் எனவும் கூட பேச்சுக்கள் உலவிவருகிறது.

இந்த தகவல்கள் எல்லாமே இதுவரைக்கும் வதந்திகளாக தான் இருக்கிறது. ஆனால் வம்சி சென்னை வந்து விஜய்க்கு கதை சொல்லிட்டு போயிருப்பது மட்டும் உறுதியான தகவலாக அறியப்படுகிறது.

இந்த குழப்பத்துக்கு முடிவு கொண்டுவர விஜய் தரப்பு கூறும் போது, "விஜய் இப்போ நடிச்சிட்டு இருக்க 65வது படம் 50 சதவீதமாவது முடிஞ்ச அப்புறம் தான் அடுத்த படத்த பத்தியே அவர் யோசிப்பாரு அது வரைக்கும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம்" என்றே சொல்லிவருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories