சினிமா

ஓ.டி.டியில் ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் ‘வலிமை’? - படக்குழுவுக்கே அப்டேட் கொடுத்த ரசிகர்கள்!

வலிமை படம் விரைவிலேயே ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது என்றும் இது பற்றிய தகவல் வெளியாகும் என பலரும் ட்வீட் செய்திருந்தார்கள்.

ஓ.டி.டியில் ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் ‘வலிமை’? - படக்குழுவுக்கே அப்டேட் கொடுத்த ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் அஜித்தின் `வலிமை'. `நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகிவருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மே 1ம் தேதி, அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும், தொடர்ந்து படம் பற்றிய மற்ற தகவல்களும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. பின்பு கொரோனா இரண்டாம் அலை காரணமாக வலிமை அப்டேட் மே 1ம் தேதி வராது என அறிவித்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இன்னும் ஒரு வாரம் மட்டுமே வலிமை படத்தின் ஷூட்டிங் நடத்த வேண்டி இருக்கும் சூழல். ஆனால் அந்த ஒரு வாரமும் ஸ்பெயின்ல தான் ஷூட்டிங் பண்ண இருக்கிறார்கள். இதற்கிடையில இப்போது எடுத்த வரையிலான படத்தின் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் Valimai OTT என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதில் வலிமை படம் விரைவிலேயே ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது என்றும் இது பற்றிய தகவல் வெளியாகும் என பலரும் ட்வீட் செய்திருந்தார்கள்.

ஒருகட்டத்தில் இது அஜித் விஜய் ரசிகர்கள் இடையே ஒரு ட்விட்டர் சண்டையாக திசைமாறியது. பின்பு வழக்கமாக சினிமா செய்திகளை வழங்கும் பலரும், வலிமை ஓடிடியில் வெளியாக சாத்தியமே இல்லை எனத் தெரிவித்த பிறகுதான் இந்தச் சண்டை சற்று ஓய்ந்தது.

banner

Related Stories

Related Stories