சினிமா

அஜித்தின் வலிமை அட்டகாசமான ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும்: ரசிகர்களுக்கு ஆர்.கே.சுரேஷ் கொடுத்த அப்டேட்

அஜித்தின் வலிமை  அட்டகாசமான ஆக்‌ஷன்  நிறைந்த படமாக இருக்கும்: ரசிகர்களுக்கு ஆர்.கே.சுரேஷ் கொடுத்த அப்டேட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமா ரசிகர்களில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் அஜித்தின் `வலிமை'. `நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி, அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும், தொடர்ந்து படம் பற்றிய மற்ற தகவல்களும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. பின்பு கொரோனா இரண்டாம் அலை காரணமாக வலிமை அப்டேட் மே 1ம் தேதி வராது என அறிவித்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இன்னும் ஒரு வாரம் மட்டுமே வலிமைக்கான ஷூட்டிங் நடத்த வேண்டி இருக்கும் சூழல். ஆனால் அந்த ஒரு வாரமும் ஸ்பெயினில் தான் ஷூட்டிங் பண்ண இருக்கிறார்கள். இதற்கிடையில இப்போது எடுத்த வரையிலான படத்தின் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை முடிக்க ப்ளான் பண்ணியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் வலிமை படம் குறித்த சின்ன அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார், வலிமை படத்தில் வேலை செய்யும் சிலரோடு நட்புக்கொண்டுள்ள இவர், அவர்கள் மூலமாக கிடைத்த தகவலைப் பகிர்ந்திருக்கிறார்,

அது என்ன என்றால், "வலிமை இது வரைக்கும் வந்த அஜித் படங்கள்ளையே அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைஞ்ச படமா உருவாகிருக்கு. மாஸ்டர் படத்துக்கு பிறகு ஃபேன்ஸை அதிகமாக திரைக்கு வர வைக்கப் போகும் படமாக வலிமை இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories