சினிமா

“தனுஷ் ஒரு மாயாஜாலக்காரர்” - கர்ணன் படத்தை புகழ்ந்த இயக்குநர் ஆனந்த் எல் ராய்!

கர்ணன் படத்தைப் பார்த்த இயக்குநர் ஆனந்த் எல் ராய் நடிகர் தனுஷையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் பாராட்டியுள்ளார்.

“தனுஷ் ஒரு மாயாஜாலக்காரர்” - கர்ணன் படத்தை புகழ்ந்த இயக்குநர் ஆனந்த் எல் ராய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பரியேறும் பெருமாள் படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது.

மே 14ம் தேதி இந்தப் படம் அமேஸான் ப்ரைமில் வெளியாகி, இன்னும் நிறைய பார்வையாளர்களை போய்ச் சேர்ந்தது. அப்படி பார்த்த பலரும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர். இந்தப் படத்தை சமீபத்தில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் பார்த்திருக்கிறார். படத்தையும், மாரி செல்வராஜையும், தனுஷையும் பற்றி குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

"OUTSTANDING & BRILLIANT... இப்படித்தான் கர்ணன் படம் பார்த்த அனுபவத்தைக் கூற முடியும். மாரி செல்வராஜ் என்ன மாதிரியான கதைசொல்லி நீங்கள்! உங்களுடைய எண்ணங்களை, திரையில் அற்புதமாக தீட்டியிருக்கிறீர்கள். தனுஷ் நீங்கள் ஒரு மாயாஜாலக்காரர் என்பதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் உங்களை நடிகர் என்று நினைத்திருந்தேன்" எனப் பாராட்டி ட்விட்டரில் எழுதியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories