சினிமா

அண்ணாத்த’க்கு பிறகு இளம் இயக்குநர் இயக்கத்தில் ரஜினி ? உருவாகிறது ராட்சசன் 2 ? - சினி பைட்ஸ்!

அண்ணாத்த’க்கு பிறகு இளம் இயக்குநர் இயக்கத்தில் ரஜினி ? உருவாகிறது ராட்சசன் 2 ? - சினி பைட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி நடிப்பில் 168வது படமாக உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்குறாங்க. இந்தப் படத்தினுடைய படப்பிடிப்புகள் சில முறை நிறுத்தி, துவங்கின்னு குழப்படியாவே இருந்தது. இப்போதுதான் ஒரே மூச்சாக படத்தை முடிக்கும் முனைப்போடு படப்பிடிப்பை ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடத்தி வருகிறார்கள்.

இந்த படத்தை முடித்த பின்பு ரஜினி தன்னுடைய 169வது படத்திற்காக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி உடன் இணைய இருப்பதாக தகவல் தான் கடந்த ஒரு வாரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், தேசிங் ரஜினியின் தீவிரமான ரசிகர் என்பதாலும், லாக்டவுன் தொடக்க காலத்தின் போது, `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பார்த்துவிட்டு தேசிங்கிற்கு ரஜினி ஃபோன் செய்து பேசியதும் அனைவரும் அறிந்ததே.

அதனால் இந்தக் கூட்டணி இணைய அதிக வாய்ப்பிருக்கிறது என்றே பொதுவாக பேசப்பட்டது. ஆனால், பரபரப்பாக பரவிவரும் இந்தத் தகவல் பற்றி தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டரில் "என்னுடைய அடுத்த படம் பற்றி பரவிவரும் தகவல் உண்மையல்ல. அதைப் பற்றி நான் விரைவில் அறிவிப்பேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாகவும் ஆரோக்யமாகவும் இருங்கள்" என ட்வீட் செய்திருந்தார்.

முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிச்சு 2018ல் வெளியான படம் `ராட்சசன்'. த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் மிகபெரிய ஹிட்டானது. தெலுங்கில் கூட `ராட்சஷடு' என ரீமேக் செய்யப்பட்டது. இந்த ஹிட்டைப் பார்த்துதான் தனக்கு ஒரு படம் பண்ண சொல்லி, ராம்குமாரை அழைத்தார் தனுஷ். அந்தப் படத்தை சத்யஜோதி தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது தனுஷ் அடுத்தடுத்த கமிட்மென்டில் பிஸியாக இருக்கிறார். `க்ரேமேன்' படத்தை முடித்துவிட்டு, கார்த்திக்நரேன் படம், செல்வராகவன் படம் என பரபரப்பான கமிட்மென்ட்ஸ் இருக்கிறது. அதே சமயம் ராம்குமார் ஸ்க்ரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த சமயத்தில் ராட்சசன் 2ஆம் பாகத்தைப் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆல்ரெடி அந்தப் படத்துக்கான ஒன்லைனை விஷ்ணு விஷாலிடம் சொல்லி டிஷ்கஷன் நடந்திருக்கிறது.

இப்போதைக்கு தனுஷ் படத்திற்கான வேலைகளே அதிகமாக இருப்பதால், தனுஷ் படத்தை முடித்ததும் ராட்சசன் 2 துவங்க இருக்கிறார் ராம்குமார். தனுஷுடைய படம் ஃபேன்டஸி அட்வென்சர் ஜானரில் உருவாக இருக்கிறது, அதற்கான விஷூவல் எஃபக்ட்ஸ் வேலைகள், ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ராம்குமார். இந்த வேலைகளால், ஜூன் மாதம் துவங்க இருந்த ராம்குமார் - தனுஷ் படம் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுது.

banner

Related Stories

Related Stories