சினிமா

11 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் டோலிவுட் ஹாட்ரிக் கூட்டணி; OTTல் ஐக்கியமான தமன்னா? - சினி பைட்ஸ்

11 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் டோலிவுட் ஹாட்ரிக் கூட்டணி; OTTல் ஐக்கியமான தமன்னா? - சினி பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கில் முன்னணி இயக்குநர் த்ரிவிக்ரம். கதாசிரியராக சினிமாவில் நுழைந்தவர் பிறகு இயக்கின படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில வரவேற்கப்பட்டது. குறிப்பாக மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் என மூன்று ஹீரோக்களோடு இவர் பணியாற்றின படங்கள் எல்லாம் செமஹிட். அல்லு அர்ஜூனுடன் கூட 'ஜூலாயி', 'சன் ஆஃப் சத்யமூர்த்தி', 'அலா வைகுண்டபுரம்லோ' ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இந்த மூன்றுமே ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

பவன் கல்யாண் நடிப்புல் 'ஜல்சா' 'அத்தாரிண்டிகி தாரேதி', 'அஞ்ஞாதவாசி' ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இதில் அஞ்ஞாதவாசி தவிர மற்ற இரண்டும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த லிஸ்டில் த்ரிவிக்ரம் ஹாட்ரிக் கூட்டணி வைக்காமல் இருந்தது மகேஷ் பாபுவுடன் மட்டும்தான். மகேஷ் பாபு நடிப்பில் 'அதடு', 'கலேஜா' என இண்டு படங்களை மட்டுமே பண்ணியிருந்தார். கூடவே அடுத்து த்ரிவிக்ரம் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அல்லது பிரபாஸ் நடிப்பார் என சொல்லப்பட்டது.

11 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் டோலிவுட் ஹாட்ரிக் கூட்டணி; OTTல் ஐக்கியமான தமன்னா? - சினி பைட்ஸ்

ஆனால், இப்போது மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணி மூன்றாவது முறையா இணைய இருக்கறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதினொரு வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இணைவதாலும், இதற்கு முன்பு அவங்க இரண்டு பேரும் இணைந்து கொடுத்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட் என்பதாலும் இந்தப் படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது. இது மகேஷ் பாபுவின் 28ஆவது படமாக உருவாகிறது. படத்தை 2022 சம்மர்க்கு ரிலீஸ். இப்போது மகேஷ் நடிக்கும் 'சர்காரு வாரி பாட்டா' படத்திற்குப் பிறகு இந்தப் படம் தொடங்கப்பட இருக்கிறது.

ஓடிடி தளங்களில் பிரபலமான ஒன்று ஹாட்ஸ்டார். தொடர்ந்து ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நோக்கத்தில் பல சீரிஸ்களை தமிழில் உருவாக்கி வெளியிடுவதாக அறிவித்தார்கள். அதன் படி ஜெய், விவேக் பிரசன்னா, வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்த `ட்ரிப்பிள்ஸ்', வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்த `லைவ் டெலிகாஸ்ட்' ஆகிய சீரிஸ்களை வெளியிட்டது ஹாட்ஸ்டார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் டோலிவுட் ஹாட்ரிக் கூட்டணி; OTTல் ஐக்கியமான தமன்னா? - சினி பைட்ஸ்

இப்போது அதன் தொடர்ச்சியாக தமன்னா நடித்திருக்கும் `நவம்பர் ஸ்டோரி' என்கிற த்ரில்லர் சீரிஸையும் வெளியிட இருக்கிறார்கள். தமன்னாவுடன், ஜி.எம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்திரா சுப்ரமணியன் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். இப்போது இந்த சீரிஸ் மே 14ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தொடர்ந்து இன்னும் சில தமிழ் லிமிட்டட் சீரிஸ்களை கையில் வைத்திருக்கிறது ஹாட்ஸ்டார். அதெல்லாம் எப்போது வெளியாகும் என்ற தகவ்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories