சினிமா

டிஜிட்டல் வடிவம் பெறும் மணி ரத்னம் படங்கள்; இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய் - சினி பைட்ஸ்!

டிஜிட்டல் வடிவம் பெறும் மணி ரத்னம் படங்கள்; இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய் - சினி பைட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த `ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க லாக்டவுன் காலத்தில் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்திற்கு முன்பு ஜெய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் சுசீந்திரன். அந்தப் படத்தைப் பரபரப்பாகவும், குறிப்பிட்ட காலத்தில் முடித்துக் கொடுத்தத்தையும் கேள்விப்பட்டுதான் சிம்பு - சுசீந்திரன் சந்திப்பே நிகழ்ந்தது.

இந்த படத்தில் ஜெய்யுடன், பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், ஸ்ம்ரிதி வெங்கட், துவ்யா துரைசாமி, காளிவெங்கட், பாலசரவணன் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய தகவல். படத்தை ஸீ5 தளத்தில் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு ஜெயுடன் மீண்டும் இணைந்து `சிவ சிவா' படத்தையும் இயக்கியிருக்கிறார்.

டிஜிட்டல் வடிவம் பெறும் மணி ரத்னம் படங்கள்; இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய் - சினி பைட்ஸ்!

தமிழில் ஜெய்யும், தெலுங்கில் ஆதியும் என பைலிங்குவலாகப் படம் உருவாகியிருக்கிறது. இது ஜெய் நடிக்கும் 30வது படம் என்பதும், இந்தப் படத்தின் மூலம் நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜெய்யாகவும் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்கள் பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் `பொன்னியின் செல்வன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக, தள்ளிப் போய்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது மணிரத்னத்தின் முந்தைய சில படங்கள் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற பழைய படங்கள் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டு ரீரிலீஸ் பண்ணப்படுவது, மிகவும் வழக்கமான ஒன்று. இதற்கு முன்பும் பல படங்கள் அவ்வாறு ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

டிஜிட்டல் வடிவம் பெறும் மணி ரத்னம் படங்கள்; இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய் - சினி பைட்ஸ்!

தியேட்டர் ரிலீஸ் தவிர, ஓடிடியில் வெளியிடுவதற்காக சில படங்கள் டிஜிட்டலைஸ்ட் செய்யப்படுவதுண்டு. விருமாண்டி, ஹேராம் போன்ற படங்கள் அப்படி ஏற்கெனவே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. அது போன்று மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது போல அரவிந்த் சுவாமி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய `ரோஜா', `பாம்பே' ஆகிய படங்களும் டிஜிட்டலைஸ்ட் செய்யப்படுகிறது. இதன் வேலைகள் Film Heritage Foundation and Prasad Studios ஆகிய இடங்களில் நடந்து கொண்டிருக்கிறதாம்.

இந்த மூன்று படங்களையும் நல்ல தரத்தில் சீக்கிரமே ஓடிடி தளங்களில் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, மணிரத்னதின் தற்போதைய படம் `பொன்னியின் செல்வன்', ஜூன் மாதம் ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories