சினிமா

ஜெயில் ரிலீசுக்கு முன்பே இன்னொரு படத்தை இயக்கி முடித்த வசந்தபாலன்; OTTக்கு செல்லும் பீட்சா 3 -சினி பைட்ஸ்

ஜெயில் ரிலீசுக்கு முன்பே இன்னொரு படத்தை இயக்கி முடித்த வசந்தபாலன்; OTTக்கு செல்லும் பீட்சா 3 -சினி பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநர் வசந்தபாலன் தன் நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறினார். `URBAN BOYS' என்ற இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை வசந்த பாலனே இயக்க, அதில் நாயகனாக அர்ஜூன் தாஸும், நாயகியாக துஷாராவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிவித்த உடனே பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் துவங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வந்தது.

துவங்கிய வேகத்திலேய படத்தை எந்த தாமதமும் இன்று முடித்தும் விட்டார் வசந்தபாலன். முதலில் இந்தப் படம் இந்தியில் வெளியான லிஃப்ட் பாய் படத்தின் ரீமேக் எனக் கூறப்பட்டது. பின்பு அது இல்லை என இயக்குநரே பதிலளித்தார். இது ஒரு தொழிலாளியைப் பற்றிய கதை எனக் கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சிங்கம் புலி, பரணி ஆகியோரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்போது பாடத்தின் போஸ்ட் புரொடஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் படத்தின் போஸ்டர் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு முன்பு வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி நடிப்பில் உருவான `ஜெயில்' படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் புதிய அலையை உண்டாக்கியதில் கடந்த 2012-ல கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து பெரிய ஹிட்டான படம் பீட்சா படத்திற்கும் மிகப்பெரிய பங்குண்டு. இந்தப் படத்தின் வெற்றி காரணமாக இதன் இரண்டாம் பாகத்தையும் உருவாகினார்கள். பீட்சா'வின் தொடர்ச்சியாக இல்லை என்றாலும், மாறுபட்ட த்ரில்லர் கதையாக இருந்தது பீட்சாவின் இரண்டாம் பாகம் `வில்லா'.

பீட்சா அளவு வில்லா பெரிய வெற்றியடையவில்லை என்பதால் அடுத்த பாகம் உருவாகாமலே இருந்தது. ஆனால், இப்போ `பீட்சா 3' உருவாகிவருகிறது. 'பீட்சா 3: தி மம்மி' எனப் பெயரிடப்பட்டிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக அஸ்வின் காக்மனு நடித்திருக்கிறார். பவித்ரா மாரிமுத்து நாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கியிருக்கிறார். ஜனவரி மாதமே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கூட வெளியானது.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து மார்ச் மாதமே படத்தை வெளீயிடலாம் என திட்டமிட்டிருந்தார் சி.வி.குமார். ஆனால், கொரோனா காரணமாக, படத்தை நேரடியாக ஓடிடியில வெளீயிட திட்டமிட்டிருக்காங்களாம். இது பீட்சா 2வின் சீக்வல் கிடையாது, ஆனால் இருக்கை நுணிக்கு வரவைக்கும் படி மிரட்டலான த்ரில்லராக இருக்கும் என்கிறார்கள். இது சி.வி.குமாரின் ரீகல் டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா, அல்லது வேறு எதாவது ஓடிடியில் வெளியாகிறதா என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories