சினிமா

அல்லு அர்ஜூன் பாடலை தொடர்ந்து ரீமிக்ஸ் செய்யும் சல்மான் கான்: வெளியானது ராதே பட சிங்கிள்!

அல்லு அர்ஜூன் பாடலை தொடர்ந்து ரீமிக்ஸ் செய்யும் சல்மான் கான்: வெளியானது ராதே பட சிங்கிள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2017ல் அல்லு அர்ஜூன் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி ஹரீஷ் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் `துவாட ஜெகன்னாதம்'. இந்தப் படம் பெரிய ஹிட்டானதோடு, படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவான பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

அதில் ஒரு பாடல்தான் `சீட்டிமார்'. இந்தப் பாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. எப்போதுமே ஒரு மொழியில் ஹிட்டான படத்தையோ பாட்டையோ மற்ற மொழிகளிலும் பயன்படுத்துவது சினிமாவில் வழக்கமான ஒன்று.

அதன்படி இந்தப் பாடலை தனது ராதே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் பிரபுதேவா. இந்தப் படத்திற்காக பாடலின் இந்தி வெர்ஷனை தேவி ஸ்ரீபிரசாத்தை வைத்து உருவாக்கி, அதை ராதே'வின் பயன்படுத்தியிருக்கிறார்.

நேற்று இந்தப் பாடலின் வீடியோ வெளியாகி இப்போது வீயூவ்ஸை குவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பினால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரிஜினல் பாடலில் நடித்து நடனமாடிய அல்லு அர்ஜூனுக்கு நன்றி கூறியிருக்கிறார் சல்மான் கான்.

அதற்காக சல்மான் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "சீட்டிமார்-க்காக நன்றி அல்லு அர்ஜூன். இந்தப் பாடலில் உங்களின் பெர்ஃபாமென்ஸ், நடனம், ஸ்டைல் எல்லாம் மிக அற்புதமாக இருந்தது" எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பாடல் யூட்யூபில் வெளியான முதல் நாளிலேயே 20 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories