சினிமா

காஞ்சுரிங் யுனிவர்ஸின் அடுத்த பட மிரட்டல் ட்ரெய்லர் வெளியீடு - சினி பைட்ஸ்

காஞ்சுரிங் யுனிவர்ஸின் அடுத்த பட மிரட்டல் ட்ரெய்லர் வெளியீடு - சினி பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழில் சிங்கம் யுனிவர்ஸ், முனி யுனிவர்ஸ் போல ஹாலிவுடில் பிரபலமானது காஞ்சூரிங் யுனிவர்ஸ்'. `காஞ்சூரிங்' சீரிஸ் படங்கள், `அனபெல்' சீரிஸ் படங்கள், `நன்' சீரிஸ் படங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த யுனிவர்ஸ். இப்போது இந்த யுனிவர்ஸில் இருந்து எட்டாவது படம் ரிலீஸ் ஆகப் போகிறது. அதுதான் The Conjuring Devil Made Me Do It'.

இந்தப் படத்தை Michael Chaves இயக்கியிருக்கிறார். காஞ்சூரிங் படத்தின் முந்தைய பாகங்களுடைய தொடர்ச்சியாகதான் இந்தப் படமும் இருக்கப் போகிறது. அமானுஷ்ய சக்திகளால வரும் பிரச்சனைகளை சரிசெய்யும் Lorraine Warren - Ed Warren தம்பதி இந்த முறை எந்த பேயை விரட்டுகிறார்கள் என்பதுதான் படத்துடைய கதை.

பார்த்து பார்த்து சலித்த கதைதான் என்றாலும், த்ரில் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கிறார்கள். இந்தப் படத்துடைய புது ட்ரெய்லரும் ரிலீஸ் ஆகியிருக்கிறது, இந்தப் படத்த ஜூன் 4ம் தேதி தியேட்டரிலும், ஹெச்.பி.ஓ மேக்ஸிலும் ரிலீஸ் பண்ணுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஜான் வர்கீஸ் இயக்கத்தில் உருவாகி 2015ல வெளியான மலையாளப் படம் `அடி கப்யாரே கூட்டமணி'. தியான் ஸ்ரீனிவாசன், நமிதா ப்ரமோத், வினீத் மோகன், அஜூ வர்கீஸ், நீரஜ் மாதவ் எனப் பலரும் நடித்திருந்த இந்தப் படம் பெரிய வெற்றியடைஞ்சது. பாய்ஸ் ஹாஸ்டலில் தன்னுடைய காதலனை சந்திக்க ஒரு பெண் செல்கிறார். அதற்குப் பிறகு அந்த ஹாஸ்டலில் என்ன நடக்கிறது என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொன்ன படம் தான் இது.

பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பு பெற்ற படம் என்பதால் இந்தப் படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகி வருகிறது `ஹாஸ்டல்' என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. அஷோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர், சதீஷ் எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். `சதுரம் 2' படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் தான் இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்துடைய ஃபர்ஸ்ட்லுக் இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டிருக்கிறார். சீக்கிரம் இந்தப் படத்துடைய மற்ற தகவல்கள் வரும்னு எதிர்பார்க்கப்படுது.

banner

Related Stories

Related Stories