சினிமா

தமிழ், மலையாளம் என இருமொழியில் உருவாகும் ‘ரஜினி’ படம்: காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் அடுத்து ஒரு படம் தமிழ் - மலையாளம் பைலிங்குவலாக உருவாக இருக்கிறது.

தமிழ், மலையாளம் என இருமொழியில் உருவாகும் ‘ரஜினி’ படம்: காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காளிதாஸ் ஜெயராம் லீட் ஹீரோவாக அறிமுகமானது`மீன் குழம்பும் மண்பானையும்' தமிழ்ப் படம் மூலமாகதான். அதைத் தொடர்ந்து மலையாளம், தமிழ் என மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் ஜெயராமின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி தனக்கான அடையாளத்தை சினிமால உருவாக்க தொடர்ந்து இயங்கிக் கொண்டுள்ளார்.

இப்போது அவருடைய நடிப்பில் அடுத்து ஒரு படம் தமிழ் - மலையாளம் பைலிங்குவலாக உருவாக இருக்கிறது. வினில் சர்காரியா வர்கீஸ் இயக்கும் இந்தப் படத்தில் நமிதா ப்ரமோத், சைஜூ குரூப், அஷ்வின் குமார், கருணாகரன், ரெபா மோனிகா எல்லோரும் நடிக்கிறார்கள்.

தமிழ், மலையாளம் என இருமொழியில் உருவாகும் ‘ரஜினி’ படம்: காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

இந்தப் படத்துக்கு வைக்கப்பட்டிருக்கு டைட்டில்தான் இப்போது பெரிதும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஒரு ரஜினி ரசிகர் என்பதால், `ரஜினி' என படத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் படத்துக்கு `ரஜினி' என்றும், தமிழில் படத்துக்கு`ரஜினி ரசிகன்' என்றும் பெயரிடப்பட்டிருக்கு.

இப்போது காளிதாஸ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் படம் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும்`ஜேக் அன்ட் ஜில்' மலையாளப் படம். இதில் மஞ்சு வாரியரும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories